உன்னாவ் மாவட்டத்தில் உள்ள, அலிகன்ஜ் என்னும் இடத்தில்,எம்பி  சாக்ஷி மகாராஜ் இரவு நேர உல்லாச விடுதியை திறந்து வைத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

லக்னோவில்,அலிகன்ஜ் என்னும் இடத்தில புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது

இதனை இரவு நேர உல்லாச விடுதியாக மாற்றப் பட்டு உள்ளது.இதனை எம்பி சாக்ஷி மகாராஜ் திறந்து வைத்துள்ளதாக  கூறப்படுகிறது.

இது குறித்து,சாக்ஷி மகாராஜ் செய்தியாளர்களிடம் கூறியது ...

உத்திரபிரதேச பாஜக முன்னாள் தலைவர் ராஜன் சிங் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்

அவரது மருமகனுக்கு சொந்தமானது இந்த விடுதி என கூறி தான் இந்த நிகழ்ச்சியில் என்னை பங்குபெற வேண்டும் என அழைப்பு விடுத்தனர். இது ஒரு உல்லாச விடுதி என்பது எனக்கு தெரியாது என கூறி  தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து உள்ளார்...மேலும் நான் ஒரு எம்பி மட்டும் அல்ல.ஒரு சாதுவும் கூட..என கூறி கொஞ்சம் அதிர்ச்சியாகி  உள்ளார் எம்பி

இதற்கு முன்னதாக, இளம் பெண் ஒருவரை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் சென்காரை சிபிஐ கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,எம்பி சாக்ஷி, இரவு உல்லாச விடுதியை திறந்து வைத்துள்ளது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.