கடலூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்துரவு கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையில் மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இங்கு விமல்ராஜ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று பொதுமக்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர் விமல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.