வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றிக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 7 பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் பூத் கமிட்டி கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “எதைப் பார்த்தாலும் பயப்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அடுத்த 8 மாதங்கள் நமக்கானது தான். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சற்று கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை வடமாநிலங்களில் கொடிகட்டி பறக்கக்கூடிய நிலையில், தென் மாநிலங்களில், குறிப்பாக தென் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தில் ஆட்சியில் அமர வைக்க வேண்டியது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு தொண்டரின் பொறுப்பு என்று தெரிவித்தார்.