இளையராஜாவின் இசையை தொடர்ச்சியாக கேட்க 17 ஆண்டுகள் தேவைப்படும் என்றும், அவர் தமிழகம் மற்றும் இந்தியாவின் பெருமை என்றும் அண்ணாமலை கூறினார்.

இசையின் கடவுள் இளையராஜா அண்ணாமலை புகழாரம் : பரபரப்பான அரசியலில் படு வேகமாக செயல்பட்டு வந்த அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் பதவியை துறந்த பிறகு, ஆன்மிகம், தியானம் இசை என நிகழ்ச்சியில் அதிகளவில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவையில் நடைபெற்ற இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு இளையராஜா பாடல்களை ரசித்தார். 

இளையராஜா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற அண்ணாமலை

முன்னதாக இசை மேடைக்கு சென்ன அண்ணாமலை இளையராஜா காலில் விழுந்து வணங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, என்னைப் பொறுத்தவரை இசை கடவுள் இளையராஜா அவருடன் இருக்கிறோம். ஐயாவை பார்க்க நாம் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து வணிகர்களாக, இசை பிரியர்களாக இங்கே நின்று கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.

நம்முடைய சந்தோசமான நேரத்தில், துக்கத்தில் , தூக்கத்தில் என அனைத்து நேரங்களிலும் இளையராஜா இசைகள், பாடல்கள் இருக்கும். 49 ஆண்டுகள் இசைத்துறையில் 1500 திரைப்படங்களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் இயற்றியுள்ளார் இளையராஜா, இளையராஜா ஐயாவின் இசையை தொடர்ச்சியாக நாம் கேட்க வேண்டும் என்றால் 17 ஆண்டுகள் தேவைப்படும். 

இந்தியாவின் பெருமையாக இளையராஜா

அவர் இதுவரை இசைத்த அனைத்து இசைகளையும் தொடர்ச்சியாக கேட்டாலே அதற்கு 17 ஆண்டுகள் ஆகும் என பெருமைப்படுத்தி பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, இதை அனைத்தையும் தாண்டி தனி பெருமை தமிழகத்தின் அடையாளமாக, இந்தியாவின் பெருமையாக ஆசியாவை சார்ந்த நபர் சிம்பொனியை லண்டனில் இசைத்து உள்ளார். அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்னர் நமது ஊருக்கு வந்திருக்கிறார்.

எல்லா மனிதர்களும் உங்களுடன் இருக்கிறார்கள். நான் சார்ந்து இருக்கக்கூடிய கட்சியின் மோடி அய்யாவாக இருக்கட்டும் , கலைஞர் அய்யாவாகட்டும், ஸ்டாலின் ஐயா வாகட்டும், அனைவரும் அன்பு கொடுக்கக்கூடிய நபர் நீங்கள் என புகழ்ந்து பேசினார். எங்களுக்கு தொடர்ந்து ஆனந்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என இளையராஜாவிடம் வேண்டுகோள் என இளையராஜாவிடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.