அம்மா.. அம்மா.!! பேருந்து நிலையத்தில் குழந்தைக்கு கல்வியை விதைக்கும் தாய்.. வைரல் வீடியோ..!
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் விதை கொண்டு தன் குழந்தைக்கு கல்வியை விதைக்கும் தாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மனிதனிடம் இருக்கும் அழியாத செல்வம் என்னவென்றால் அது கல்வி தான். கல்விக்கு எதுவும் ஈடாகாது என்பது தான் உண்மை. கல்விதான் மனிதனின் அறிவு கண்களை திறக்கிறது. பகுத்தறிவை உருவாக்கி அவனை வழிநடத்துகிறது. தான் பெற்ற கல்வியை தனக்கு மட்டும் பயன்படுவதாக அல்லாமல், பிறருக்கும் பயன்படுவதாக செய்ய வேண்டும்.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு கணக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், கும்பகோணம் பஸ் நிலையத்தில் தனது குழந்தையுடன் வந்த பெண் மணி ஒருவர் ஒரு கடையின் அருகே அமருகிறார்.
அப்போது அந்த பெண்மணியின் குழந்தை தன்னிடம் இருக்கும் விதை போன்ற பொருளை தரையில் அடுக்கி வைத்து விளையாடி கொண்டிருந்தது. அதனை கண்ட அந்த குழந்தையின் தாய் அந்த விதை போன்ற பொருளை தரையில் ஒவ்வொன்றாக தரையில் அடுக்கி தன் விரலால் தனது குழந்தைக்கு ஒன்று, இரண்டு, மூன்று என்று 13 எண் வரை சொல்லி கொடுக்கிறார். அதனை அந்த குழந்தை தனது தாய் சொல்ல சொல்ல திரும்ப சொல்கிறது.
அவ்வாறு சொல்லும் போது தவறாக கூறினால் அதனை அன்பாக கண்டித்து குழந்தையை சரியாக கூற சொல்கிறார். குழந்தையும் தனது தாயை செல்லமாக தட்டி தனது மழலை குரலில் திருத்தி சொல்கிறது. தற்போது இந்த வீடியே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை காணும் அனைவரும் அந்த தாயை பாராட்டி வருகின்றனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?