ஆளும் கிரகங்களின் சஞ்சாரம் – யாருக்கெல்லாம் அதிகார யோகம், உயர் பதவி, அரசியல் வாழ்க்கை தேடி வரும் தெரியுமா?
Adhikara Yoga 2024 Palan Tamil : குரு, சூரியன், செவ்வாய் போன்ற கிரங்களின் சஞ்சாரம் 6 ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கொடுக்கும் என்று அறிந்து கொள்வோம்..
Astrology, Horoscope, Zodiac Signs, Adhikara Yoga Palan in Tamil
Adhikara Yoga 2024 Palan Tamil : 2024 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த ஆண்டுகளில் எந்தெந்த ராசியினருக்கு கிரகங்களின் சேர்க்கை பலன் காரணமாக அதிகார யோகமும், பதவி உயர்வும், அரசியல் வாழ்க்கையும் தேடி வர போகிறது என்பது குறித்து பார்க்கலாம். கிரக நிலைகளின் சஞ்சாரம், வியாழன், சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் வலிமையும் எந்தெந்த ராசியினருக்கு நன்மை செய்யும் என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
Adhigara Yogam, Mars, Sun, Guru, Jupiter
மகரம்:
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உயர் பதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் உங்களுக்கான உயர் பதவிகள் தேடி வரும். அதிர்ஷ்டம் வீட்டு கதவை தட்டும். அரசு சார்பில் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். வாழ்க்கை முன்னேற்ற பாதையில் செல்லும். உங்களது உயர்ந்த குணங்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியவரும்.
Adhikara Yoga Palan Tamil, Astrology, Top 6 Zodiac Signs Getting Adhikara Yoga Palan Tamil
விருச்சிகம்:
பிரபலங்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். அது அரசியல்வாதியாக கூட இருக்கலாம். சினிமா துறையைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கலாம். குரு, சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் சாதகமான இடங்களில் இருப்பதால் உயர் பதவி கிடைக்க பெறுவீர்கள். சம்பள உயர்வு ஏற்படும். வேலையை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். இலக்கு வெற்றியை நோக்கியே இருக்கும். வெளிநாட்டு வேலை கூட கிடைக்க பெறுவீர்கள்.
Adhigara Yoga Palan Tamil, Adhikara Yogam Palan Tamil
மேஷம்:
இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு கிரக நிலைகளின் சஞ்சாரம் காரணமாக மேஷ ராசியினருக்கு உயர் பதவி தேடி வரும் யோகம் வந்துள்ளது. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள். இனி வரும் நாட்களில் உங்களது நல்ல குணங்கள் மற்றர்களுக்கு தெரிய வரும். நவம்பர் 15ஆம் தேதியான இன்று முதல் குரு மற்றும் ராகுவின் சஞ்சாரம் சாதகமாக நிலையில் இருப்பதால் அதிபதியான செவ்வாய் பகவான் உடன் இணைந்து அந்தஸ்து உயர வழி வகுக்கும். மதிப்பு, மரியாதை கூடும். உயர் பதவிகள் மூலமாக வருமானம் அதிகரிக்கும்.
Astrology, Horoscope, Zodiac Signs, Adhikara Yoga Palan in Tamil
தனுசு:
நேர்மையான குணங்களை கொண்ட தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு பிரபலங்களுடன் நெருக்கமாகும் வாய்ப்பு தேடி வரும். செவ்வாய், சூரியன் சாதமாக இருப்பதால் வேலையில் மாற்றம் ஏற்படும். கடினமாக உழைக்கும் உங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உயர் பதவிகள் தேடி வரும். தலைமைப் பண்பு உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் ஒரு அமைப்புக்கு தலைவராக பொறுப்பேற்பீர்கள்.
Adhigara Yoga Palan Tamil, Adhikara Yoga Palan Tamil
சிம்மம்:
எப்போதுமே சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரமிக்கவர்களாக இருப்பார்கள். குடும்பத்தில் இவர்களது ராஜ்ஜியமி தான் இருக்கும். நவம்பர் 15 இன்று முதல், குரு, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் சாதகமான திசையில் இருப்பதால் உங்களுக்கு உயர் பதவி தேடி வரும். அரசியல் பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வெற்றி வீடு தேடி வரும். உங்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
Adhigara Yogam, Mars, Sun, Guru, Jupiter
துலாம்:
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த விரும்புவீர்கள். உங்களது வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். சூரியன் மற்றும் செவ்வாய் சாதகமாக இருப்பதால், உயர் பதவி, சம்பள உயர்வு தேடி வரும்.