கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய விவகாரம்..! அடுத்தடுத்து வரும் புது புது அறிவிப்பு..!  

சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கையும், அமைச்சர்கள் கொடுத்த ஆதரவு குரலும் இங்கே பார்க்கலாம். 

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது - விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை இணை இயக்குநர்.

விசாரணை நடத்த உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள இரத்த வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைகிறார்.விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் நேரில் விசாரணை மேற்கொள்கிறார் ராதாகிருஷ்ணன்.அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை.

எச்ஐவியால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி.பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் சண்முகராஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் 

எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவருக்குஅரசு வேலை வழங்க உள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.