கோவை பாஜக நிர்வாகி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்; கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்!!
கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் தொடரும் சோதனை
கோவையில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி தினந்தோறும் கார், பைக் மற்றும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தொடர் சோதனை காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு! 9ம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
பெட்ரோல் குண்டோடு ஒருவர் கைது
இந்த நிலையில் தான் கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதற்காக இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் குண்டுடன் சென்ற ஒருவரை காவல் துறையினர் வாகன சோதனையின் போது கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாசர், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. ஏற்கனவே இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசு சம்பவம், நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்தால் திரையரங்கம் மீது குண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்; 6 பேர் மீது வழக்கு; வேலூரில் ஷாக்!
பாஜக நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச திட்டம்
இந்த நிலையில் தான் நேற்று இரவு வாகன சோதனையின் போது பிடிபட்ட நாசரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெலுங்கு பாளையம் பகுதியில் உள்ள பா.ஜ.க ஆன்மீக அணி தலைவர் மணிகண்டன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சென்றது தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற போது செல்வபுரம் பகுதியில் வைத்து காவல் துறையினரின் சோதனையில் சிக்கினார்.
நாசர், மணிகண்டனுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச சென்றது தெரியவந்துள்ளது. நல்வாய்ப்பாக போலீசார் சோதனையில் நாசர் சிக்கியுள்ளார். இவர் மீது கோவை, சூலூர் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது