பாரதிராஜா மகன் மீது அதிரடி வழக்கு....குடிபோதையில் கார் ஓட்டியதாக புகார்..!

குடிபோதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்

நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனம் மற்றும் சொகுசு கார்களை நிறுத்தி சோதனை செய்தனர்

அப்போது, பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார்

இதனை அறிந்த போலீசார் காரை நிறுத்த சொல்லி அவரிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது பட்ட பகலிலேயே நன்கு  குடித்துவிட்டு,போதையில் தட்டு தடுமாறி நடிகர் மனோஜ் காரை இயக்கியது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போக்குவரத்துக்கு போலீசார்  அவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்

சமீபத்திய காலங்களில் பாரதிராஜா பல்வேற போராட்டம் நடத்தி வருகிறார். அவருடைய பெயர், நிறைய இடங்களில் ஒரு போராட்டக்காரர் என்ற ரீதியிலேயே மக்களிடையே செல்கிறது. இந்நலையில் தான் இவருடைய மகன் மனோஜ் கே பாரதிராஜா குடி போதையில் கார் ஓட்டி வந்து போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டார்.

நடிகர் மனோஜ் தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகர் ஜெய் இதே போன்று நட்சத்திர விடுதியில் மது அருந்திவிட்டு வீடு திரும்பும் போது போலிசாரிடம் சிக்கினார். இந்நிலையில் அடுத்த சினிமா பிரபலம் மது போதையில்  கார் ஓட்டி சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.