விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தால் நெல்லையில் இருதரப்பு மோதல் ஏற்பட்டு நெல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதுதொடர்பாக 20க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லையில் நேற்று முன்தினம் இரவு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடந்த கலவரம் காரணமாக செங்கோட்டை, தென்காசி பகுதிகளில் நேற்று முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஷில்பா பிரபாகரன் அறிவித்தார். அதில், இன்று காலை 6 மணி வரை 144 தடை இருக்கும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வரை தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் நேற்று இரவு செங்கோட்டையில் ஒரு வீட்டின் மீது, பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இதனை கண்டித்து சாலை மறியல் நடந்தது.

இதற்கிடையில், நேற்று மாலை இருதரப்பினிர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கற்கனை வீசி, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதையடுத்து, அங்கு  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் விசாரித்து, கலவரத்தில் ஈடுபட்ட 20க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.