பக்தர்களே அலர்ட் !! சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை.. இந்தெந்த நாட்களில் அனுமதி கிடையாது..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு வரும் நவ.9 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையொட்டி தொடர் மழையின் காரணமாக, ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுணர்மி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கபடும். மற்ற நாட்களில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். அந்த வகையில் மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: 14 ஆண்டுகளாக விற்பனையில் ஆவின் டிலைட்..! மீண்டும் விளம்பரம் ஏன்.? யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு- பால்முகவர்கள்
இதனிடையே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, கோவிலுக்கு செல்லும் வழிகளில் உள்ள ஓடைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஜப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுணர்மியையொட்டி வருகிற நவ.5 ஆம் தேதி முதல் நவ.9 ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.எனவே மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!