Asianet News TamilAsianet News Tamil

பக்தர்களே முக்கிய செய்தி.. ஆடி பெளர்ணமி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி..? வனத்துறை அறிவிப்பு..

ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

Aadi month full moon Chathuragiri hill temple banned
Author
Tamil Nadu, First Published Aug 11, 2022, 1:05 PM IST

ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை,பெளணர்மி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் மட்டும் தான் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

மேலும் படிக்க:இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர தீ விபத்து.!சம்பவ இடத்திலேயே துடி,துடித்து உடல் கருகி 2 பேர் பலி

கொரொனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பெளணர்மி ஆகிய முக்கிய நாட்களில் மட்டும் வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. இதன்படி, ஆடி மாத அமாவாசை வெகு விமர்சையாக நடைபெற்றும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

மேலும் படிக்க:அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு.. ஆதிச்சநல்லூரை தொடர்ந்து சிவகளையில் தங்கம் கண்டெடுப்பு

இந்நிலையில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நாட்களில் பக்தர்கள் யாரும் வழிபாட நடத்த கோவிலுக்கு வரவேண்டாம் என்று வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios