கோவையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யானை

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே பெண் யானை ஒன்று இறந்து கிடந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் யானையின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

wild female elephant found death in coimbatore forest

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மருதமலை, ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகள் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது. அதே சமயம் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. 

இந்நிலையில், ஆனைகட்டி பகுதியில் வன களப்பணியாளர்கள் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி மத்திய சுற்றுக்கு உட்பட்ட தூமனூர் பகுதியில் காப்பு காட்டிற்கு வெளியே அரசு புறம்போக்கு நிலத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; பாபநாசம் பட பாணியில் உடலை புதைத்த கொடூரம்

இதனைத் தொடர்ந்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் வன கால்நடை மருத்துவரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

புதுக்கோட்டையில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்; பொதுமக்கள் ஆரவாரம்

யானை உயிரிழந்த இடத்திற்கு அருகிலேயே மரம் ஒன்றும் வேருடன் முறிந்து விழுந்துள்ள நிலையில் யானை இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios