கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; மனைவியின் செயலால் அதிர்ந்த காவல்துறை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவியையும், கள்ளக்காதலனையும் ஒரு மாதத்திற்கு பின்னர் கண்டுபிடித்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கீழ்மாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 35). இவரது மனைவி திவ்யா (27). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாரதி சென்னையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாரதியின் அக்கா கணவரான செல்வமணி என்பவர், பந்தநல்லூர் காவல் நிலையத்தில், கடந்த மே 24ம் தேதி தனது மனைவியின் தம்பி பாரதியை காணவில்லை. அவருடைய மொபைல் போனும் சுட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், பந்தநல்லூர் காவல் துறையினர், கடந்த சில நாட்களுக்காக, பாரதியை தேடினர். தொடர்ந்து விசாரணையில், காவல் துறையினருக்கு பாரதியின் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே, அவருடைய செல்போன் எண்ணை பரிசோதனை செய்தனர்.
அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்துக் கொண்ட காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், திவ்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. விசாரணையில், திவ்யாவுக்கும், கீழ்மாந்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (38) இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னையில் இருந்து ஊருக்கு வந்த பாரதிக்கு தெரியவர, மனைவி திவ்யாவை எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது அக்கா கணவரான செல்வமணியிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
திருப்பூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
இதையடுத்து, கள்ளக்காதல் விவகாரம் தனது கணவருக்கு தெரிந்த நிலையில், இடையூராக இருப்பார் என்பதால், அவரை தனது கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கொலை செய்ய திவ்யா திட்டமிட்டுள்ளார். பிறகு, திவ்யா கடந்த மே 16ம் தேதி, தனது கணவரான பாரதியிடம், திவ்யா அன்பாக பேசி ஊருக்கு வரவழைத்துள்ளார். ஊருக்கு வந்த கணவரை, வீட்டில் மறைந்து இருந்த கள்ளக்காதலன் சதீஸ்குமாருடன் சேர்ந்து கட்டையால் தலையில் அடித்து, கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், பாரதியின் உடலை, மூட்டையாக கட்டி, சதீஷ்குமார், திவ்யா இருவரும், லோடுஆட்டோவில் எடுத்து சென்று, திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் உள்ள பாலத்தில் அருகே புதைத்து தெரியவந்தது. இதையடுத்து பந்தநல்லூர் காவல் துறையினர், திவ்யா, சதீஸ்குமார் இருவரையும் கைது செய்தனர். அத்துடன் லோடு ஆட்டோ ஓட்டுநரான தென்னரசு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பட்டம் குறுக்கு சாலையில் பைபாஸ் சாலை போடும் பணி நடக்கிறது. சாலை மேம்பாலம் தூண்கள் மேல் பகுதி இணைப்பு பணிகள் நடந்த போது தான் அந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட பாரதி புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் ஒரு மாதம் முன்பு புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்ட் கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.
பாரதி புதைக்கப்பட்ட இடத்தினை திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா டிஎஸ்பி ஜாபர் சித்திக் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணி நடந்தது. சாலையை சுமார் ஏழு அடி பள்ளம் தோன்றிய நிலையில் சாக்கு மூட்டையில் பாரதி உடலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. பாரதியின் முகம் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக் கொண்டு மூடியதோடு சாக்குகள் கொண்டும் அவரது உடலை கட்டி புதைத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் சோதனைச்சாவடி அருகே வீசி செல்லப்பட்ட ஆண் குழந்தையால் பரபரப்பு
தங்கள் வீட்டில் பூஜை செய்த பொருளை புதைக்க வேண்டும் என்று கூறி லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து சாலை பணியில் ஈடுபட்டிருந்த சில வட மாநில பணியாளர்களின் உதவியோடு சதீஷ்குமார் உடலை புதைத்துள்ளது காவல் துறையினரை திகைக்க செய்துள்ளது. சாலையை தோண்டி மீட்கப்பட்ட பாரதி உடலை டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். இச்சம்பவத்தில் சாலை பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்ளின் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கேனும் தொடர் உள்ளதா? எனும் கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.