கோவையில் பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உதவி!
கோவையில் பூக்கட்டும் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், உதவிகள் வழங்கப்பட்டன
கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூக்கட்டும் பெண் தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல்,முருகன், “பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை நமக்கு கொடுத்து உள்ளார். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், வீடு, வீடாக குடிநீர் கொடுக்கும் திட்டம், இலவச சமையல் எரிவாயு, முத்ரா திட்டம், சிறு வியாபாரிகளுக்கான திட்டம். அந்த வரிசையில், விஸ்வகர்மா யோஜனா என்ற இந்த திட்டத்தை கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியன்று பிரதமர் இந்தியா முழுவதும் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், நகை செய்பவர்கள், மண்பானை செய்பவர்கள், தச்சர்கள், செருப்பு தைப்பவர்கள், பூ கட்டுபவர்கள், கைவினை பொருட்கள் செய்பவர்கள் போன்ற 18 வகையான தொழில் செய்பவர்களுக்கு பயனடைவார்கள். முத்ரா லோன் திட்டத்தில் நமது சகோதரிகள்தான் இந்தியாவிலே இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.” என்றார்.
முன்னதாக, பாரம்பரிய திறன்களுடனோ, கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு சுமார் 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
தீபாவளி பண்டிகை: ஆவின் நிர்வாகத்துக்கு டார்கெட்!
கருவிகள் மூலமும், கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். மேலும், கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டு செல்வதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படும்.