தீபாவளி பண்டிகை: ஆவின் நிர்வாகத்துக்கு டார்கெட்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிர்வாகத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆவின் மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்க ஆவின் நிர்வாகத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 20 சதவீதம் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலே முதன்முறையாக சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட்: நெல்லை மருத்துவர்கள் சாதனை!
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பால் உபபொருட்கள் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்க ஆவின் பாலகங்கள் மற்றும் முகவர்கள் மூலம் தங்கு தடையின்றி விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவரும் தங்களுக்குத் தேவையான இனிப்பு மற்றும் காரம் வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.