Asianet News TamilAsianet News Tamil

தக்காளி விலை வீழ்ச்சி! - கோவை ஆட்சியர் அலுவகம் முன்பு தக்காளியை கொட்டி போராட்டம்!

கடந்த வாரம் ரூபாய் 20-க்கும் விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ 5ரூபாய்க்கும் கீழ் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் தக்காளியை தரையில் கொட்டி ஆர்பாட்டமும் நடத்தினர்.
 

Tomato prices fall! - Protest by throwing tomatoes in front of the Coimbatore Collector's Office!
Author
First Published Nov 21, 2022, 10:21 PM IST

தக்காளி பெட்டி 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது ஒரு கிலோ தக்காளி ரூ.4க்கும் குறைவாக விற்கப்பட்டது. குனியமுத்தூர்: மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையத்தில் காய்கறி கமிஷன் மண்டிகள் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு நாச்சிபாளையத்தை சுற்றியுள்ள வழுக்குபாறை, வேலந்தாவளம், கண்ணமநாயக்கனூர், திருமலையம் பாளையம், பிச்சனூர், சொக்கனூர், அரிசிபாளையம், பாலத்துறை, மதுக்கரை போன்ற பகுதியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக தக்காளி அதிகளவில் வருகிறது. கடந்த சில தினங்களாக மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடுமையாக குறைந்தே காணப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்தனர்.

விலை மிகவும் குறைவாக இருந்ததால் விவசாயிகள் வேறு வழியின்றி தக்காளியை சாலையோரம் வீசி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இவ்வளவு குறைவான விலைக்கு தக்காளி விற்கும் போது, லோடுமேன் இறக்கு கூலி மற்றும் கமிஷன் ஆகியவை கொடுக்க முடியவில்லை. இந்த காரணத்தால் வேறு வழியின்றி கீழே கொட்டி விட்டு செல்கிறோம் என்றனர். நாச்சிபாளையம் பகுதியில் தக்காளிகள் பெட்டி பெட்டியாக கீழே கொட்டப்பட்டு செல்வதால், விவசாயிகள் மட்டுமன்றி அப்பகுதி மக்களும் கவலையில் உள்ளனர்.

பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மேலும், தக்காளி போட்டியுடன் வந்த அவர்கள் தரைகளில் தக்காளியை கொடியும் கைகளில் செடிகளை ஏந்திக்கொண்டு தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Follow Us:
Download App:
  • android
  • ios