கோவையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; சிறுவாணி அணை நீர்மட்டம் 2.85 அடியாக சரிவு

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் மாநகரில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

There is a risk of drinking water shortage in Coimbatore as the water level of Siruvani Dam has decreased

கோவை மாநகரில் 26 வார்டுகள், 20க்கும் மேற்பட்ட நகரை ஒட்டிய கிராமங்களுக்கு குடி நீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. பிப்ரவரி இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.

மார்ச் மாதத்தில் அணையின் நீர் மட்டம் 6 அடியாகச் சரிந்தது. அதைத்தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் வந்தது. தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளதாலும், கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2.85 அடியாகக் குறைந்தது.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்

இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது. வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோரமண்டல் ரயில் விபத்துகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி கோரிக்கை

இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஜூன் மாத இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பருவ மழை தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் உயரும். பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். மாநகரில் சிறுவாணி நீர் விநியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்த ஆண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios