ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்

ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamilnadu government has given Rs 5 lakh compensation to the families of those who died in the odisa train accident says cm mk stalin

ஒடிசா மாநிலத்தில் நேற்று இரவு நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்ற தமிழக முல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே துறை சார்பாக ரூ. 10 லட்சமும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்த, உயிரிழந்தவர்களின் முழு விவரம் தெரிய வந்த பின்னர் இந்த நிவாரணத் தொகையானது வழங்கப்பட உள்ளது.

கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள்.. அமைச்சர் சிவசங்கர் மட்டுமல்ல.! உதயநிதியும் கிளம்புறாரு.!!

மேலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒடிசாவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர். அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

கோரமண்டல் விரைவு ரயில் விபத்து.. தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை? வெளியான அதிர்ச்சி தகவல்.!

மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஆனால், தற்போதைக்கு எந்தவித உதவியும் தேவைப்படவில்லை என்று ஒடிசா மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள மாநில கட்டுப்பாட்டு செல்போன் எண் 94458 69843, வாட்ஸ் அப் எண் 94458 69848 உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios