MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை முதல் மதுரை வரை.. ரயில் பாதைகளில் பெரிய மாற்றம்.. 13 நகரங்கள்.. ஒரே நாளில் மாறப்போகுது

சென்னை முதல் மதுரை வரை.. ரயில் பாதைகளில் பெரிய மாற்றம்.. 13 நகரங்கள்.. ஒரே நாளில் மாறப்போகுது

தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 6 முக்கிய ரயில் பாதைகளுக்கு திறன் விரிவாக்கத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவை தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

2 Min read
Author : Raghupati R
Published : Mar 15 2026, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழ்நாட்டில் 6 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்
Image Credit : Google

தமிழ்நாட்டில் 6 ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள்

தமிழ்நாட்டில் ரயில் போக்குவரத்து திறனை அதிகரிக்க முக்கியமான திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி 6 முக்கிய ரயில் பாதைகளுக்கான திறன் விரிவாக்க திட்டங்களுக்கு இறுதி இருப்பிட ஆய்வு (FLS) நடத்த மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் எழுதியுள்ள தகவல் மூலம் இந்த முடிவு தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் ரயில் போக்குவரத்துக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

25
சென்னை அரக்கோணம் ரயில் பாதை
Image Credit : Asianet News

சென்னை அரக்கோணம் ரயில் பாதை

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை–அரக்கோணம், அரக்கோணம்–ரேணிகுண்டா மற்றும் சென்னை–குடூர் பாதைகளில் ஐந்தாவது மற்றும் ஆறாவது ரயில் பாதைகளை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக சென்னை நகரத்தை ஆந்திர பிரதேசம் மற்றும் கிழக்கு, வட இந்திய பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய பாதைகள் இவை என்பதால், இங்கு அதிக அளவில் புறநகர் ரயில்கள், தூரப்பயண ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த பாதைகளில் திறன் விரிவாக்கம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

Related Articles

Related image1
ரூ.49,999 விலையில்.. 86 கிமீ ரேஞ்ச் தரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்.. கேம் சேஞ்சர் இதுதான்
Related image2
விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
35
விழுப்புரம்–திருச்சி–நாகர்கோவில் வழித்தடம்
Image Credit : our own

விழுப்புரம்–திருச்சி–நாகர்கோவில் வழித்தடம்

மேலும் விழுப்புரம்–திருச்சி–நாகர்கோவில் வழித்தடத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகளை அமைப்பதற்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாகவே தென் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான மதுரை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி நோக்கி பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த திட்டம் நிறைவேறினால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் சேவை மேலும் வேகமாகவும் வசதியாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

45
புதிய ரயில் பாதைகள்
Image Credit : our own

புதிய ரயில் பாதைகள்

மேலும் பாலக்காடு–பொள்ளாச்சி–போடனூர் மற்றும் திருச்சி–கரைக்குடி–மானாமதுரை–மதுரை பாதைகளிலும் இரட்டை பாதை அமைப்பதற்கான ஆய்வு நடைபெற உள்ளது. தற்போது இந்த வழித்தடங்களில் சில பகுதிகள் ஒற்றை பாதையாக அல்லது குறைந்த திறன் கொண்டதாக இருப்பதால் ரயில் இயக்கத்தில் தாமதங்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கான ரயில் இணைப்பு மேலும் மேம்பாடும்.

55
ரயில் சேவை மேம்பாடு
Image Credit : our own

ரயில் சேவை மேம்பாடு

ரயில்வே திட்டங்களில் இறுதி இருப்பிட ஆய்வு (FLS) என்பது மிகவும் முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. இதில் புதிய பாதையின் துல்லியமான வழித்தடம், நிலம் தேவைகள் மற்றும் ஆரம்ப கட்ட செலவு மதிப்பீடுகள் போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வு முடிந்த பிறகே அந்த திட்டம் அடுத்த கட்டமாக அனுமதி பெறும். எனவே இந்த 6 பாதைகளுக்கான FLS அனுமதி, தமிழ்நாட்டில் ரயில் கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரயில்
சென்னை
மதுரை
திருச்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
Recommended image2
Now Playing
செக் மேட் ரெடி.! மீண்டும் முலமைச்சராக நடிகர்.! இனிதான் ஆட்டமே இருக்கு!
Recommended image3
திமுக கூட்டணியில் பிளவு? முதல் ஆளாக தாவெக-வுக்கு ஓடும் சிபிஎம்! அதிரடி பின்னணி!
Related Stories
Recommended image1
ரூ.49,999 விலையில்.. 86 கிமீ ரேஞ்ச் தரும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்.. கேம் சேஞ்சர் இதுதான்
Recommended image2
விஜய் டாப்.. முதல்வர் பதவியில் ஸ்டாலின்.. அடுத்து ஆட்சி அமைப்பது யார்? சர்வே கொடுத்த ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved