கோவை டிஐஜி தற்கொலை விவகாரத்தில் இருவர் நேரில் ஆஜராகி விளக்கம்; 8 பேருக்கு சம்மன்

கோவை டி.ஐ.ஜி தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இருவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

The police have sought an explanation from those who commented on the suicide of Coimbatore DIG Vijayakumar

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் கடந்த 7 தேதி முகாம் அலுவலகத்தில், கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை, ராமநாதபுரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அருகில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர். காவல் துறை அதிகாரிகள்,  டி ஐ ஜி தற்கொலை தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில், பதிவிட வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தனர். காவல் துறையின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு காவல் துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

பாஜகவால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது - சுற்றுலாத்துறை அமைச்சர் திட்டவட்டம்

சம்மனை பெற்றுக்கொண்ட பேசு தமிழா பேசு யூடூப் சேனல் நிறுவனர்  ராஜவேல் நாகராஜ் மற்றும் வாராஹி என்பவரும், இன்று  கோவை  ராமநாதபுரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக  வந்தனர். உதவி ஆணையர் கரிகாலன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார், அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

புதுவையில் நடராஜர் சிலை மீது நின்றுகொண்டு படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios