பாஜகவால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது - சுற்றுலாத்துறை அமைச்சர் திட்டவட்டம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை என்ற பெயரில் மத்திய அரசு தொடர்ந்து தவறு செய்து வருவதாகவும், திமுக அரசை அச்சுறுத்த நினைப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

bjp will not take a single seat in tamil nadu upcoming parliament election says minister ramachandran

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் சுற்றுலாத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு கோடை விழா தொடங்க உள்ள நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திருவண்ணாமலைக்கு வருகை தந்து யாத்திரி நிவாஸ், தமிழ்நாடு ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். யாத்திரிநிவாஸ் அறைகளை பார்வையிட்ட அவர், அனைத்து அறைகளும் தூய்மையாக இருக்க வேண்டும். விடுதியில் அறை எடுத்து தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் முழுமையாக செய்து தரப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் உணவகத்தில் சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பணியாளர்களிடம் உணவு அருந்தவரும் வாடிக்கையாளர்களுக்கு தலை வாழை இலையில் தான் சாப்பாடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் இன்றி நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜவ்வாது மலையில் 20 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு வருடத்திற்குள் அப்பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்.

பொன்முடி வீட்டில் நடந்த ED சோதனை.! கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் மதிப்பு இவ்வளவா.? வெளியான தகவல்

மேலும், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க மத்திய அரசு தவறு செய்து வருவதாகவும், பயமுறுத்தி பார்ப்பதாகவும் கூறியவர் விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசு ஒன்று அல்லது இரண்டு இடங்களை பிடிக்க முயற்சி செய்வதாகவும், 40 இடங்களில் ஒரு இடத்தை கூட பாஜகவால் பிடிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார். விரைவில் சாத்தனூர் அணையில் படகு குழாம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios