மேயருக்கான மாலையை சாலையில் வீசி கோபத்தை வெளிப்படுத்திய கோவை மாநராட்சி தூய்மைப் பணியாளர்கள்!!
கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் இன்று தர்ணா நடத்தினர். தீபாவளிக்குப் பின்னரும் 25ஆம் தேதி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
கோவையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீர்மானமாக நிறைவேற்றப்படும் எனவும் மேயர் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது.
இதனால், தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு இருந்தனர். இந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சியில் மாமன்றக் கூட்டம் நடந்தது. இதில், தூய்மைப் பணியாளர்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருப்பதால், தீபாவளி முடிந்த பிறகு மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தூய்மைப் பணியாளர் அமைப்புகள் மற்றும் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க..தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு
வரும் 25 ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தைக்கு ஒத்துப் போவதில்லை எனவும், வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளம் வரும் வரை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். மாமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் சாதகமாக வரும் என நம்பி வந்த தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் மேயருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தனர். இந்த நிலையில் தீர்மானத்தில் உடன்பாடு ஏற்படாததால் மேயருக்கு கொண்டு வந்த மாலையை சாலையில் எறிந்து சென்றனர்.
இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு