தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வுக்கு போங்க.. உருவான இந்து Vs முஸ்லீம் சர்ச்சை - தெலங்கனாவில் பரபரப்பு
தெலங்கானாவில் தேர்வு மையத்திற்குள் இந்து பெண்கள் தாலியை கழட்டி வைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று தேர்வு அலுவலர்கள் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் போடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிளவுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், வழக்கை விசாரிப்பதற்காக ஒரு பெரிய பெஞ்ச் அமைக்க இந்திய தலைமை நீதிபதிக்கு மாற்றப்பட்டது. தற்போது தெலங்கானாவிலும் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் போடுவது அதிகரித்துள்ளது.
இந்து Vs முஸ்லீம்
தெலங்கானா மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி) கடந்த அக்டோபர் 16ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குரூப்-1 முதல்நிலைத் தேர்வினை நடத்தியது. தெலங்கானாவில் உள்ள அடிலாபாத் என்ற இடத்தில் உள்ள தேர்வு மையத்தில், தேர்வு எழுத வந்த இந்து பெண்களிடம் வளையல்கள், காதணிகள், கணுக்கால்கள், கால் மோதிரங்கள், செயின்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கழற்றி விட்டுச் செல்லுமாறும், சில பெண்களிடம் தாலியை அவிழ்க்குமாறும் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க..நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்
பாஜகவினர் எதிர்ப்பு
அதே சமயம், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு மையத்திற்குள் நுழைவதைக் கண்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட யாரும் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் பிரித்தி காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இது நேற்று தெலுங்கானாவில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் நடந்தது. புர்கா அணிவதற்கு அனுமதி உண்டு. ஆனால் காதணிகள், வளையல்கள் மற்றும் தாலியை அகற்ற வேண்டும். இது வெட்கக்கேடானது; என்று பதிவிட்டார்.
தெலுங்கானாவில் சர்ச்சை
தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசு சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்கிறது என்று மாநிலத்தைச் சேர்ந்த மற்ற பாஜக தலைவர்களும் ட்விட்டரில் கடுமையாகத் தாக்கினர். முஸ்லீம் பெண்களை ஹிஜாப் அணிந்து தேர்வு மையத்திற்குள் நுழைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதித்த நிலையில், இந்து பெண்கள் வளையல்கள், கால் மோதிரங்கள், செயின்கள், காதணிகள் மற்றும் தாலி ஆகியவற்றைக் கழற்றச் சொன்னது எப்படி என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு