நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்த நிலையில், வன்முறை மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக்குழு 3000 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை கடந்த மே மாதம் 18ந் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தது.
இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்
அருணா ஜெகதீசன் அறிக்கை
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்க கூறப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்றும், நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில், துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க..பாலியல் தொழிலில் இலங்கை பெண்கள்.. ஸ்லீப்பர் செல்ஸ் ஊடுருவல்! உளவுத்துறை தந்த ரிப்போர்ட் - பரபரப்பு
நிமிடத்துக்கு நிமிடம் தகவல்
ஆனால் அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தெரிவித்தனர்.
எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போது பழனிசாமி கூறியது தவறானது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சர்ச்சையை கிளம்பியுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை