Asianet News TamilAsianet News Tamil

‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Jayalalitha died on 4th December Arumugasamy commission said Jayalalitha brother son Deepak statement
Author
First Published Oct 18, 2022, 4:30 PM IST

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை

இரண்டாம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு சிகிச்சை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்பல்லோ மருத்துவமனை

தனது வீட்டின் முதல் மாடியில்இருந்து படுக்கை அறைக்கு வரும்போது ஜெயலலிதா மயங்கி விழுந்தார். அப்போது அவரை சசிகலா தாங்கி பிடித்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

Jayalalitha died on 4th December Arumugasamy commission said Jayalalitha brother son Deepak statement

இதையும் படிங்க..ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷ்யா.. பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் உக்ரைன் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதா இறப்பு தேதி

இந்த விசாரணையில் சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறியிருந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதியே அவர் இறந்துவிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மயக்கமடைந்த பிறகு நடந்த எல்லாமே மர்மமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவர்களின் பரிந்துரையின் படி ஜெயலலிதாவுக்கு 3 நாட்களுக்கு முன்பே பாராசிட்டமல் கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிமுகவினரிடம் மட்டுமல்ல, பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

டிசம்பர் 4 ஆம் தேதி

அது என்னவென்றால், ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க..13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய பெண் ஆசிரியை.. எல்லாம் எதற்கு தெரியுமா ?

Jayalalitha died on 4th December Arumugasamy commission said Jayalalitha brother son Deepak statement

திதி கொடுத்த தீபக்

இதற்கு ஆதாரமாக ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு டிசம்பர் 4ம்தேதி 3.50  மணிக்கு அவரது சகோதரர் மகன் தீபக் திதி கொடுத்ததை  அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளனர். இதுதொடர்பாக அறிக்கையில், ஜெயலலிதா  இறந்த நேரம் முக்கியத்துவம் வாய்ந்ததும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துவதும் ஆகும். டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறப்பு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு

மருத்துவமனையில் ஜெயலலிதாவை பராமரித்துகொண்ட பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு முன்பே மறைந்த முதலமைச்சருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்றும் இதயத்தில் மின்சார செயல்பாடு எதுவும் இல்லை மற்றும் இரத்த ஓட்டம் இல்லை என்பதே அவரின் உடல்நிலையை கண்காணித்து வந்தவர்களின் தெளிவான சாட்சியங்களாக இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

Follow Us:
Download App:
  • android
  • ios