கோவில் உண்டியல்களை குறிவைக்கும் தமிழக அரசு பக்தர்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் - தமிழிசை

கோவில் உண்டியல்களை குறிவைக்கும் இந்துசமய அறநிலையத்துறை பக்தர்களின் பாதுகாப்பிலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

tamil nadu government should give a proper protection to pilgrims at tamil nadu temples says governor tamilisai Soundararajan vel

கோவையில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், நிகழ்ச்சி நிறைவடைந்து, விமானம் மூலம் ஐதராபாத் செல்ல கோவை விமான நிலையத்திற்கு வருகை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் மழை வரும் போல் உள்ளது. சென்னை போன்று வெள்ள பாதிப்புகள் ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு  மேற்க்கொள்ள வேண்டும். 

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களை தாக்கியது கண்டனத்திற்கு உரியது. அறநிலையத்துறை அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார். கோவிலில், எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும்  தரைக்குறைவாக நடத்துவது, அடிப்பது வன்மையாக கண்டனத்திற்கு உரியது. வைகுண்ட ஏகாதசி விழா நடக்கவிருக்கும் இந்த சூழலில்  இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது  வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

திண்டிவணத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கடும் மோதல்; போர்க்களமான கடைவீதி

பெண்ணை பற்றி, பெண் உரிமை பற்றி பேசும் முதல்வர் முக ஸ்டாலின் பழங்குடியின பெண் ஜனாதிபதிக்கு ஒட்டு போட மறுத்தவர். கேரளாவில் ஆளுநர் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தற்போது ஆளுநர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் தான் நிலவுகிறது. தமிழகத்தில் கூட ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆளுநர்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம் என மத்திய அமைச்சரை பார்த்து உதயநிதி கேட்கிறார். உதயநிதி யை பார்த்து தான், இது உங்க அப்பன் வீட்டு பொறுப்பா என்று திமுக தொண்டர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios