கோவை தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது - தமிழக அரசு

கோவை அன்னூரில் தொழிற் பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என்றும் தனியாருக்கு சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

tamil nadu government is favour for farmers in anytime

தொழில் மற்றும் கல்வி துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி, பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மாநில அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் - தமிழக அரசு அதிரடி

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.  மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்.  மேலும், எந்தவித கட்டாயமும் இன்றி, விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.

8 மாவட்டங்களில் கன மழைக்குவாய்ப்பு.! 70 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை

விவசாயிகளின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அவர்களின் நலனிற்காக மட்டுமே செயல்படும். இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும்.  எனவே, டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios