Asianet News TamilAsianet News Tamil

8 மாவட்டங்களில் கன மழைக்குவாய்ப்பு.! 70 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 16ஆம் தேதி காலை  தொடங்கி  சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

The Meteorological Department has issued a warning to the fishermen as wind speed of 70 km per hour is blowing in the Arabian Sea
Author
First Published Dec 16, 2022, 3:00 PM IST

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 16.12.2022 முதல் 18.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

20.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

The Meteorological Department has issued a warning to the fishermen as wind speed of 70 km per hour is blowing in the Arabian Sea

சென்னை வானிலை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் & தெற்கு வங்கக்கடல் பகுதிகள்: 16.12.2022  & 17.12.2022  :  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும்.  இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்:  18.12.2022  முதல் 20.12.2022 வரை :  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும். 

The Meteorological Department has issued a warning to the fishermen as wind speed of 70 km per hour is blowing in the Arabian Sea

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் : 16.12.2022 காலை  தொடங்கி  சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக  குறைந்து 16.12.2022 மாலை வரை   மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு  காற்றின் வேகம் மீண்டும் குறைந்து  17.12.2022 காலை  வரை   மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் :  இன்று 16.12.2022  மாலை  வரை   சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக  குறைந்து  17.12.2022 காலை  வரை   மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த இடங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்

விஜய் தான் நம்பர் 1..! வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர் வேண்டும்..! உதயநிதியை சந்திக்க திட்டம்- தில்ராஜூ

Follow Us:
Download App:
  • android
  • ios