கோவையில் பிரபல தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கறி; வாடிக்கையாளர் ஆதங்கம்

கோவை ஜி.என். மில் பகுதியில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் கெட்டுப்போன கறி பயன்படுத்தப்படுவதாக வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

spoiled meat used famous private hotel in coimbatore

நமது வாழ்வியல் முறையில் மேற்கத்திய கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உணவு முறையும் மாறி வருகிறது. அதன் விளைவாக புரோட்டா சாப்பிட்ட இளைஞர் மரணம், ஷவர்மா சாப்பிட்ட பெண் பலி போன்ற செய்திகள் அவ்வபோது வருகின்றன. கோவையிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் கோவையில் சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தனர். 

இந்த நிலையில் கோவையில் பல இடங்களில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி உணவகத்தின் கிளை உணவகம் கோவை ஜி.என் மில் பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வாடிக்கையாளர் ஒருவர் அந்த உணவகத்திற்கு சென்று கிரில் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

spoiled meat used famous private hotel in coimbatore

அதனை வீட்டுக்கு சென்று சாப்பிட எடுக்கும் போது அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும் சிக்கன் கடினமாக இருந்துள்ளது.  இதை அடுத்து மீண்டும் அந்த உணவகத்திற்கு சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அங்கிருந்த மேலாளர் சிறிது தவறு நடந்து விட்டதாகவும் அதை பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறியு உள்ளார். 

எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்டியல்ல அதிமுக - ஓ.பி.எஸ். அதிரடி

உணவகத்திற்குள் சென்று குளிர்சாதன பெட்டியை திறந்து காட்டுமாறு கூறியுள்ளார். ஏராளமான குளிர்சாதன பெட்டிகளில் சிக்கன்களை அடுக்கி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அது குறித்து மேலாளரிடம் கேட்டபோது இங்கிருந்து பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அனுப்புவதற்காக வைத்துள்ளதாக கூறுகின்றார். இதையும் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு  என வாடிக்கையாளர் கேள்வி எழுப்புகிறார். இந்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுபோன்று உணவகங்களுக்கு சென்று உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios