கோவையில் கோலகலமாக நடைபெற்ற அம்மன் கோயில் திருவிழா... சட்டையால் அடித்துக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்!!
கோவையில் நடைபெற்ற சாட்டையடி திருவிழா பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கோவையில் நடைபெற்ற சாட்டையடி திருவிழா பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கோவை பூசாரிபாளையம் பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அடைக்கலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையும் படிங்க: ஆற்று வெள்ளத்தில் அடித்து செலப்பட்ட பெண்கள்… நீலகிரி அருகே நிகழந்த அதிர்ச்சி சம்பவம்!!
இதனை அடுத்து அம்மன் திருக்கலாயணம், அபிஷேகம், பிடிமன் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கோயிலில் இருக்கும் அம்மன் ஆற்றில் இருந்து உருவானதாக முன்னோர்கள் கூறியுள்ள நிலையில் அதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் திருவிழாவின் போது அம்மனை பக்தர்கள் ஆற்றங்கரையில் இருந்து அழைத்து வருவது வழக்கம்.
இதையும் படிங்க: வெளியானது தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
அதன்படி இந்தாண்டு திருவிழாவில் மேல தாலங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பக்தர்களும் தங்களது மீது சாட்டையை சுழற்றி அடித்து கொண்டு ஆற்றங்கரையில் இருந்து இன்று அம்மனை கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்த சாட்டையடி திருவிழா மூலம் தங்களது நேர்த்தி கடனை செலுத்தியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.