Asianet News TamilAsianet News Tamil

வெளியானது தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

tnpsc notification about assistant conservator of Forests included in Group IA Services out
Author
First Published Dec 13, 2022, 8:44 PM IST

தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 09 

ஊதியம்: 

  • ரூ.56100- 2,05,700/- வரை (நிலை 22)

வயது வரம்பு: 

  • 1.07.2022 அன்று 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்), ஆதி திராவிடர், ஆதி திராவிட அருந்ததியர், பழங்குடியினர் 1.07.2022 அன்று 34 வயதுக்குள் இருக்க வேண்டும். 
  • அனைத்து பிரிவுகளை சேர்ந்த ஆதரவற்ற விதவைகள்  1.07.2022 அன்று 39 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் A Bachelor’s Degree in Forestry, A Bachelor’s Degree in Botany, A Bachelor’s Degree in Zoology, A Bachelor’s Degree in Physics, A Bachelor’s Degree in Chemistry, A Bachelor’s Degree in Mathematics, A Bachelor’s Degree in Statistics, A Bachelor’s Degree in Geology, A Bachelor’s Degree in Agriculture, A Bachelor’s Degree in Horticulture, A Bachelor’s Degree in Agricultural Engineering, A Bachelor’s Degree in Civil Engineering, A Bachelor’s Degree in Chemical Engineering, A Bachelor’s Degree in Computer/Computer Science Engineering, A Bachelor’s Degree in Electrical Engineering, A Bachelor’s Degree in Electronics Engineering, A Bachelor’s Degree in Mechanical Engineering, A Bachelor’s Degree in Computer Applications, A Bachelor’s Degree in Computer Science, A Bachelor’s Degree in Environmental Science, A Bachelor’s Degree in Veterinary Science பாடங்களில் ஏதேனும் ஒன்றினை முதன்மை பாடமாக கொண்டு   இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: வேளாண் வணிகத்துறையில் 14 பேருக்கு வேலை... பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் பணிக்கு குரூப் 1ஏ தேர்வு எழுத வேண்டும். 

முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கான தேர்வு திட்டம்: 

  • முதல்நிலை தேர்வு ஒற்றைத் தாள் கொண்டது. 
  • பொது அறிவு மற்றும் மனக்கணக்கு பாடங்களில் இருந்து 300 கேள்விகள் கேட்கப்படும்.
  • முதன்மைத் தேர்வு 5 தாள்களைக் கொண்டது. 
  • முதற் தாள் கட்டாய தமிழ் மொழி தகுதித் தாளாகும். 2ம் தாள் பொது அறிவு, 3ம் தாள் பொது ஆங்கிலம், நான்கு மற்றும் ஐந்தாம் தாள் விருப்ப பாடம் ஆகும்.
  • நேர்முகத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள் உண்டு.

தேர்வுக்கான முக்கிய தேதிகள்: 

இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி:

  • 12.01.2023

இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம்  மேற்கொள்வதற்கான கால அவகாசம்: 

  • 17.01.2023 முதல் 19.01.2023 வரை

இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி மரணங்களில் 3வது இடத்தில் தமிழ்நாடு.. தொடரும் அவலம் ! மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி:

  • 30.04.2023

முதல்நிலை எழுத்துத்தேர்வு முடிவு வெளியிடும் நாள்:

  • ஜூன் 2023

முதன்மை எழுத்துத் தேர்வு: 

  • செப்டம்பர், 2023

வாய்மொழித் தேர்வு & கலந்தாய்வு:

  • டிசம்பர் 2023

விண்ணப்பிப்பது எப்படி? 

  • TNPSC தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
Follow Us:
Download App:
  • android
  • ios