கோவை கார் வெடிப்பு விவகாரம்... உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சோதனை... என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி!!
கோவை உக்கடத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாநகர காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை உக்கடத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாநகர காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பெய்த மழையால் 2 பேர் உயிரிழப்பு... மாலைக்குள் குடும்பத்திற்கு நிவாரணம்... கே.என்.நேரு உறுதி!!
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜமேஷா முபின் கூட்டாளிகளான முகமது தல்கர், முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், மற்றும் அப்சர் கான் ஆகிய ஆறு பேரை உபா சட்டத்தில் கைது செய்தனர். இதனிடையே வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து கார் குண்டுவெடிப்பு ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி... முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேச்சு!!
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக கைதான ஆறு பேரையும் மீண்டும் விசாரிக்க கோவை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னைக்கு விரைவில் அழைத்து செல்லப்பட உள்ளனர். இந்த நிலையில் கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாநகர போலீசார் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.