சென்னை வந்துள்ள மம்தா பானர்ஜி... முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேச்சு!!

சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

mamata banerjee met cm stalin at chennai

சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இல.கணேசனின் வீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை வந்த மம்தா பானர்ஜி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க: சென்னையில் பெய்த மழையால் 2 பேர் உயிரிழப்பு... மாலைக்குள் குடும்பத்திற்கு நிவாரணம்... கே.என்.நேரு உறுதி!!

மம்தா ஏற்கனவே தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், பிகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்து பாஜகவுக்கு எதிராக, தேசிய அளவில் வலுவான மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், இது தேர்தல் சந்திப்பு அல்ல. மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: தத்தளிக்கும் சென்னை!! கூடுதல் ஏற்பாடுகள் அவசியம் - தமிழ்நாடு அரசுக்கு மக்கள் நீதி மய்யம் விடுத்த கோரிக்கை

அவரை தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, ஸ்டாலின் எனது சகோதரர் போன்றவர். சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்வது. ஸ்டாலினை சந்திக்க வேண்டியது என் கடமை. இரண்டு அரசியல் தலைவர்கள் அரசியல் தான் பேச வேண்டும் என்று இல்லை. நாங்கள் வளர்ச்சி குறித்து பேசினோம். வளர்ச்சிதான் மிக முக்கியமானது. அரசியல் குறித்து எதும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்தார். முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு வந்த மம்தாவை வாசலில் நின்று வரவேற்ற மு.க.ஸ்டாலின், அவருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அதேபோல் மம்தாவும் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது மு.க.ஸ்டாலினுடன் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios