Asianet News TamilAsianet News Tamil

சாலைத்திட்டப் பணிகளுக்கு கடந்த ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை - அமைச்சர் குற்றச்சாட்டு

கோவையில் கடந்த ஆட்சி காலத்தில் சாலை திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்ககப்படவில்லை என்று மின்வாரித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

past admk government did not focus on road works says minister senthil balaji
Author
First Published Mar 25, 2023, 10:27 AM IST

கோவையில் இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். 2022-23 தார்சாலை பணிகள், சீர்மிகு நகர திட்டம், பொது நிதிப்பணிகள் என கோவை சிங்காநல்லூர், தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.32.78 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் துவக்கி வைக்கப்படுகின்றன. அதன்படி கோவை தெற்கு தொகுதி கெம்பட்டி காலனி பகுதியில் தார் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்படுகிறது. 

கோவை தனியார் கல்லூரி ஓரினச்சேர்க்கை பேராசிரியரால் பாலியல் தொல்லை; மாணவர் பரபரப்பு புகார்

குறிப்பாக சாலைப் பணிகளுக்கான ஒப்புதல் முதல்வர் மூலம் பெறப்பட்டு டெண்டர் முடிக்கப்பட்டு பணிகள் துவக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் புதுபிக்கப்படாத தார் சாலைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வரப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சாலைப்பணிகள் மட்டும் ஏறத்தாழ 70% நிறைவு பெற்றுள்ளது எனவும் கூறினார். 

இந்த குறுகிய காலத்தில் 121 கிமீ க்கு 223 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என கூறிய அமைச்சர், இது கோவை மாநகராட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். இடையர்ப்பாளையம் - தடாகம் சாலைப்பணிகள் பாதி முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும். 

குளக்கரைக்கு வரும் காதல் ஜோடிகள் தான் டார்கெட்; 4 இளைஞர்களை பொறி வைத்து தூக்கிய காவல்துறை

மெட்ரோ பணிகள் DPR இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கும். இது இல்லாத வளர்ச்சி திட்டங்கள் முதலமைச்சரால் கோவைக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மீது அக்கறை கொண்டு இவற்றை வழங்கி வருகிறார். மேலும் செம்மொழி பூங்கா அறிவிப்பு, எழில்மிகு கோவை என்பவை மிக சிறப்பான ஒரு திட்டம். 

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிய சாலைகள் தான் பழுதடைந்து உள்ளன, சாலைப்பணிகளுக்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, அதே போல பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளும் புதுபிக்கபடாமல் இருந்தது. இதனையெல்லம் கவனத்தில் கொண்டுதான் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios