திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து.. காலையிலேயே கோவையில் நடந்த பரபரப்பு சம்பவம்..
கோவை பீளமேடு அருகே தனியார் ஆம்னிபேருந்து ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பீளமேடு அருகே தனியார் ஆம்னிபேருந்து ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றிரவு 40 பயணிகளுடன் திருவண்ணாமலையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கோவை புறப்பட்டது. தாஸ் என்ற ஓட்டுநர் இந்த பெருந்தை இயக்கிய நிலையில், பயணிகள் அங்காங்கே தங்களின் இடம் வந்ததும் இறங்கினர். இதை தொடர்ந்து 30 பயணிகளுடன் அந்த பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்ததது.
அப்போது கோவை மாட்டம் சித்திரா என்ற பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்த போது காலை 6 மணியளவில் அந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. கரும்புகை கிளம்பிய உடனே பேருந்து ஓட்டுநர் தாஸ் பேருந்தை நிறுத்திவிட்டு சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, உள்ளே இருந்த பயணிகளை வெளியேறும்படி கூறினார்.
இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அந்த பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில் அந்த பேருந்து முழுவதுமே தீ பரவியதால் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து பீளமேடு காவல்துறை மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் குப்பையில் கிடந்த வைர நெக்லஸ்; தூய்மை பணியாளரின் தூய்மை உள்ளத்திற்கு குவியும் பாராட்டு
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.