நாட்டிலேயே முதல் முறையாக விஷம் குறித்து படிப்பதற்கு கோவையில் புதிய படிப்பு அறிமுகம்

நாட்டில் முதல் முறையாக விஷங்கள் குறித்து படிப்பதற்கான ஒரு பட்டபய படிப்பு கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் புதிய பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

new courses introduced about poisons at animals and plants in coimbatore

இந்தியாவிலேயே முதன் முறையாக, விஷங்களை பற்றி படிப்பதற்காக ஒரு பட்டய படிப்பு கோவை, பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் புதிதாக துவங்கபட்டது. இது தொடர்பாக லண்டன் ரேடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி கூறியதாவது, இங்கிலாந்தில் உள்ள ரேடிங் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து, பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் விஷங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த படிப்பில், விஷம்  பற்றியும், அவைகளின் தன்மை பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் மாணவர்கள் விரிவாக படிப்பார்கள். மேலும் பாம்புகளின் விஷம், முதுகெலும்பு இல்லாத ஊர்வனவைகளான பூரான், சிலந்தி, தேள்களின் விஷம் குறித்து விரிவாக படிப்பார்கள். மேலும் தாவரங்களில் உள்ள, விஷங்கள், அவற்றின் விளைவுகள் பற்றியும் படிப்பார்கள். முக்கியமாக விஷக்கடிகளுக்கு  எவ்வாறு சிகிச்சை அளிப்பார்கள் என்பது  பற்றியும், உயிரை கொல்ல கூடிய விஷத்தை மருந்துகளாக  பயண்படுத்துவது, குறித்தும் விரிவாக படிப்பார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து விவசாயிகள் மொட்டை அடித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டம்

இந்த படிப்பானது, 10 வாரங்களுக்குள் முடித்து விடும். அவ்வாறு முடித்த மாணவ, மாணவிகளுக்கு, இதற்காக சான்றிதல்கள் வழங்கபடும். அதனை வைத்து மாணவர்கள், விஷங்களை பற்றிய ஆராய்ச்சியிலும், பெரியமருந்து  நிறுவனங்களிலும் சேர்வதற்கான, வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த படிப்பில் சேர 12வது முடித்து இருந்தால் போதுமானது. இந்த  கல்லூரியில் பயிலும் மாணவிகள் மட்டுமின்றி, கோவையை சார்ந்த பொதுமக்கள், வேறு  கல்லூரிகளில் படிக்கும்  மாணவ, மாணவிகளும்  சேர்ந்து பயணடையலாம். 

ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வாரத்தில் எதாவது ஒரு நாள், 2மணி நேரம் மட்டும் பயிற்சியளிக்கப்படும். இதற்காக சிறப்பு பயிற்சி மையம் இங்கு அமைக்கபட்டுள்ளது. இதனை கோவையை சார்ந்த அனைவரும் படிக்கலாம் என்றார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios