Asianet News TamilAsianet News Tamil

அனைத்து கண்காணிப்பு கேமராக்களுக்கும் ஒரே கட்டுப்பாட்டு அறை; சூலூர் ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு!!

கோவையில் புறநகர் பகுதிகளில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறை சூலூர் காவல் எல்லையில் திறக்கப்பட்டுள்ளது.

new control room opened at sulur police station in coimbatore for control near 500 cctv camera on whole city vel
Author
First Published Dec 27, 2023, 2:07 PM IST

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க ஏதுவாக காவல் நிலைய வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஒன்றிணைந்த சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை மற்றும் காவலர்கள் ஓய்வுவறை  திறக்கப்பட்டது. இதனை கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி, டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன்,  காவல் ஆய்வாளர் மாதையன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து ஐஜி பவானீஸ்வரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குற்றங்களை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக உள்ளன. கோவை மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொருத்தப்பட்டுள்ள 500 சிசிடிவி கேமராக்களுக்கு ஒரே இடத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முகாமிட்டதால் வனத்துறையினரும், வாகன ஓட்டிகளும் அச்சம்

குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கு காவல்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதை முதன்மையாகக் கொண்டு காவல்துறை இயங்கி வருகிறது. மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்கு வெளியே வீடுகள் கட்டியுள்ள 4 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். 

திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற ஆருத்ரா மகா அபிஷேகம்

அங்கு வாழும் மூத்த குடிமக்களுக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களின் அலைபேசி எண்களை வழங்கியுள்ளோம். மேலும் மூத்த குடிமக்களின் அலைபேசியில் ஸ்பீடு டயலில் காவலர்களின் தொடர்பு எண்களை பதிவு செய்துள்ளோம். ஆபத்து காலத்தில் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ள இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும். அதிக அளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைய வாய்ப்புகள் உள்ளன.  சிசிடிவிகள் அமைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. பொதுமக்களும் காவல்துறையுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையனின் இந்த முயற்சிக்கு காவல் துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios