கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடை பேரணியில் எச்.ராஜா மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடை பேரணியில் எச்.ராஜா மற்றும் சிறுவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தியது. அந்த வகையில் கோவையில் சத்ரபதி வீரசிவாஜியின் 350வது முடி சூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர். கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் துவங்கிய இந்த பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி… 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
இந்த பேரணியில் சிறுவர்கள் உட்பட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மற்றும் பாஜக, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி என சங் பரிவார் அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக காவி கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின்பு பேண்ட் வத்தியங்கள் முழங்க பேரணி தொடங்கியது. எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க ஊர்வலம் செல்லும் பாதை முழுவதும் கோவை மாநகர துணை ஆணையர் சந்தீஷ் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி... சென்னை பேரணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!!
காவி கொடியை கையில் ஏந்தி சென்ற தொண்டர்களுக்கும் பாரதமாதா, ஹெக்டேவர், கோல்வார்க்கர் போன்றோரின் உருவ படங்களுடன் வந்த வாகனத்திற்கும் வழி நெடுகிலும் திரண்டிருந்த பெண்கள் மலர் தூபி வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து பேரணியின் நிறைவில் ராஜவீதி தேர்நிலைத்திடலில் ஆர் எஸ் எஸ் பயிற்சி மற்றும் வீர சாகச பயிற்சிகள் நடத்தப்பட்டு பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மகளிரணி தேடிய தலைவர் வானதி சீனிவாசன், மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், பாஜக விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
