ஸ்டைலிஷ் தமிழச்சியாக மேடையில் மிளிர்ந்த குஷ்பு, வெட்கப்பட்ட வானதி சீனிவாசன்

கோவை கைத்தறி ஆடை அலங்கார  அணிவகுப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், குஷ்பு கலந்து கொண்டனர்.

mla vanathi srinivasan and bjp person kushboo participate ramp walk show at coimbatore

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில், மக்கள் சேவை மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கைத்தறி ஆடை அலங்கார  அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச கைத்தறி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், மக்கள் சேவை மையத்தின் நிறுவனரும், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் ஆடை அலங்கார அணிவகுப்பில்  வானதி சீனிவாசன் மற்றும் குஷ்பு ஆகியோரும்  கேட்வாக் நடந்து மாணவ, மாணவியரை உற்சாகப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

Kushboo

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு,  கைத்தறி ஆடைகளை எல்லா இடங்களிலும் முன்னிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பள்ளி மாணவியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த ஆசிரியர்; 30 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவு

மணிப்பூர் குறித்த கேள்விகளுக்கு, அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும்  குஜராத் முதல்வராக இருந்த பொழுது மோடிக்கு விசா மறுக்கப்பட்டது எனவும்,  இப்பொழுது அவரை அமெரிக்கா கூப்பிட்டு கௌரவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பைடனே தேடி வந்து வணக்கம் சொல்லும் நிலை இருக்கிறது. பிரதமர் மோடி உலகத்திலயே மிகப்பெரிய தலைவராக இருக்கிறார். அவரது ஆட்சியில்  இந்தியாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமைப்படுகிறேன். ஆகஸ்ட் 7ம் தேதி  தேதி அவருடைய நினைவு நாள். காலையிலேயே அவரது வணக்கம் சொல்லி என்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவு செய்து இருக்கின்றேன். கலைஞர்  குறித்து பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம்.  நான் அங்கிருந்து வந்தவள். அவரைப் பற்றி நன்றாக தெரியும். வேறு ஒரு தளத்தில் கலைஞர் குறித்து பேசலாம் எனவும் தெரிவித்தார்.

ஆம்பூர் அருகே அசுர வேகத்தில் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்; 2 பேர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

பேசன் ஷோக்களில் வருபவர்கள் யாருமே சிரிக்க மாட்டேன் என்கிறார்கள்,  இது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்படி ஒரு சட்ட விதி இருக்கிறதா?  சின்ன சிரிப்பே இல்லாமல் பொதுவாக எல்லா பேசன் ஷோக்களிலும் பார்க்க முடிகின்றது. கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகள் எனக்கு பிடிக்கும். இந்த ஆட்சியில் கைத்தறி வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் கைத்தறி பொருட்கள்  பயன்படுத்துகின்றோம் எனவும் தெரிவித்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு வெஸ்டர்ன் உடைகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே வேளையில் நமது கலாசாரங்களை மறந்துவிட வேண்டாம் என சொல்கின்றேன். பிரதமர் ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள், நெசவாளர்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான முயற்சிகளை  மேற்கொண்டு வருகிறார். கைத்தறி நெசவாளர்களுக்கான  நல வாரியம் உருவாக வானதி இருக்கிறார், நான் இருக்கிறேன் எல்லாருமே சேர்ந்து தான் செய்ய முடியும் கண்டிப்பாக செய்வோம்.

ஆடை சுதந்திரம் என்பது இப்படித்தான் என்று எதுவும் இல்லை,  ஆனால் மனிதர்களுக்கு ஆறு அறிவு  இருக்கிறது. நமக்கு எல்லை தெரியும். எல்லை மீறி சென்றால் மிருகங்களுக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து அப்படி ஆடை  அணிய வேண்டும். எனக்கு புடவை தான் எல்லை என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios