பள்ளி மாணவியை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த ஆசிரியர்; 30 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவு
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மொரப்பூர் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்த 14 வயது மாணவி கடந்த 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியராக அதே பள்ளியில் பணியாற்றிய முபாரக், (27) என்பவரும் காணவில்லை என்பது தெரிய வந்தது.
இதை அடுத்து மொரப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது திடுகிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆங்கில வகுப்பு ஆசிரியர் அதே பள்ளியில் படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது தெரியவந்தது.
ஆம்பூர் அருகே அசுர வேகத்தில் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்; 2 பேர் பலி, 3 பேர் கவலைக்கிடம்
இதைத்தொடர்ந்து மொரப்பூர் காவல் துறையினர் CCTV கேமரா காட்சிகளின் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடத்திச் செல்லப்பட்ட மாணவி சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து ஆசிரியர் மற்றும் மாணவி இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மாணவி கூறுகையில், தன்னிடம் ஆசை வார்த்தைகளால் பேசி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பள்ளிக்கு வரும்போது என்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு ஆசிரியர் முபாரக்கை மொரப்பூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கிடு கிடுவென குறைந்த மேட்டூர் அணை நீர் மட்டம்; முழுவதுமாக வெளியில் தெரியும் நந்தி சிலை
சிறையில் இருந்த முபாரக் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தருமபுரி மகிளா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட முபாரக்கிற்கு 30 ஆண்டு சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா, உத்தரவிட்டார்.