கிடு கிடுவென குறைந்த மேட்டூர் அணை நீர் மட்டம்; முழுவதுமாக வெளியில் தெரியும் நந்தி சிலை
அணை நீர்மட்டம் 58 அடியாக குறைந்ததால் மேட்டூர் அணையில் உள்ள நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து 200 கன அடிக்கும் குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
இதற்கிடையே நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று 9 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 299 கன அடியாகவும், நீர் இருப்பு 23.93 டி.எம்.சி, யாகவும் உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் குறையும் போது பண்ணவாடி நீர்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம், ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்திசிலை ஆகியவை வெளியே தலை காட்டும்.
பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் பரபரப்பு புகார்
தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக சரிந்ததால் நந்தி சிலை முழுவதுமாக வெளியே தெரிகிறது. பண்ணவாடி நீர்த்தேக்க பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் சென்று நந்திசிலை மற்றும் கிறிஸ்தவ ஆலய கோபுரத்தை கண்டு ரசித்து வருகின்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் இனிவரும் நாட்களில் ஜலகண்டேஸ்வரர் கோவிலும், நந்தி சிலையின் பீடம் முழுவதும் வெளியே தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசாக பிறந்து பதவிக்கு வந்தவர் அல்ல திரௌபதி முர்மு - குடியரசு தலைவருக்கு தமிழிசை புகழாரம்