பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் பரபரப்பு புகார்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் பள்ளி தலைமை ஆசிரியரால் தாக்கப்ட்ட மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூத்தூர்மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயசந்திரன். தையல் தொழிலாளி. இவரது மகன் குன்னூர் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவனுடன் சேர்ந்து மேலும் மூன்று பேர் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தாமஸ் பெற்றோர் மாற்றுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்காமலே தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் தாமாகவே மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள கூறி இருக்கிறார். பள்ளியை விட்டு செல்ல மனமில்லாத அந்த மாணவன் மாற்று சான்றிதழ் பெறாமல் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மாணவனின் தாயாரை அழைத்து மூளை சலவை செய்து மாற்று சான்றிதழை கடந்த ஜூன் 21ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார்.
ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரமுடியும் - வாகை சந்திரசேகர் பேச்சு
இந்நிலையில் மாணவன் வேறு பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் வீட்டில் அடம் பிடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மாணவன் ஜூன் 22ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து தான் அதே பள்ளியில் தான் படிக்க விரும்புவதாகவும், என் பெற்றோரை மூளை சலவை செய்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி உள்ளனர். மீண்டும் தன்னை அதே பள்ளியில் படிக்க வழி வகை செய்யுமாறும் மனு ஒன்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீண்டும் மாணவனை அதே புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் என்னை மீறி மாவட்ட அலுவலரிடம் புகார் அளித்து மீண்டும் இதே பள்ளிக்கு வந்து விட்டாய் எப்படி நீ படிக்கிறாய் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மாணவன் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ட்ராக் சூட் உடை அணிந்து சென்ற பொழுது முறையாக ஆடை அணியவில்லை என கூறி மாணவனை தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் கம்பால் சரமாரியாக தலை மற்றும் கை கால்களில் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
வாழ்வா சாவா தேர்தல் பாஜகவுக்கு அல்ல, திமுகவுக்கு தான் - அண்ணாமலை பேட்டி
இதனால் மாணவன் நேற்று இரவு வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனால் தற்போது மாணவனின் கண்பார்வை மங்கலாக இருப்பதாகவும், தலைப்பகுதியில் அதிக வலி உள்ளதால் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்தை உதயச்சந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மீது குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்க கூடாது என்ற சட்டம் இருந்தும், இதுபோல் கொடூர தாக்குதல் நடத்திய தலைமை ஆசிரியர் தாமஸ் செல்வம் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா என்பது பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.