மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிப்பு? அமைச்சர் விளக்கம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகின்ற 31ம் தேதி வரை உள்ள நிலையில், தற்போது வரை 50% மக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில், விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரே நாளில் மூன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதலாவதாக நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை மேற்கொள்கிறார்.
கோவை வி்மான நிலையத்தில் பயணிகளுக்கு இந்த பரிசோதனை கட்டாயம் - அரசு அதிரடி
இதனைத் தொடர்ந்து கொடிசிய மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் நிறைவு பெற்ற பணிகளுக்கு தொடக்க விழாவும், சில பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்ட உள்ளார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு வருகின்ற 31ம் தேதி வரை உள்ள நிலையில் தற்போது வரை 50 விழுக்காடு மக்கள் இந்த பணியை முடித்துள்ளனர். 31ம் தேதிக்கு பின்னர் மொத்தமாக எவ்வளவு பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கான முடிவை முதல்வர் அறிவிப்பார்.
மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்தை பூஸ்டர் டோசாக பயன்படுத்த அரசு அனுமதி
ஒருசிலர் அரசியல் காரணத்திற்காக தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.