Asianet News TamilAsianet News Tamil

மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்தை பூஸ்டர் டோசாக பயன்படுத்த அரசு அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை மூன்றாவது தவணையாக அதாவது பூஸ்டர் டோசாக செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 

Covid nasal spray vaccine by Bharat Biotech cleared by govt to be used as booster dose in adults
Author
First Published Dec 24, 2022, 8:25 AM IST

கொரோனா தொற்று பாதிப்பை தடுப்பதற்காக கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊசி அல்லாமல் மூக்க மூலமாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் அவசரகால அனுமதியை வழங்கி இருந்தது.

இந்நிலையில், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நடுகளில் புதிய வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மூன்றாவது தவணையாக அதாவது பூஸ்டர் டோசாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும், அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருந்து விநியோகிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு சென்று திரும்பிய போது பயங்கர விபத்து! 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. 8 பக்தர்கள் பலியான சோகம்.!

மேலும் முதல் இரு தவணைகளாக கோவேக்சின், கோவி ஷீல்டு உள்ளிட்ட எந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும் மூன்றாவது தவணையாக இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. சுவாசப் பாதையின் மேற்பரப்பில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை வழக்கமான கொரோனா தடுப்பூசி தடுப்பதில்லை என்றும், அதற்கு தீர்வு காணும் வகையில் பிபிவி154 என்ற மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்து ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், யாருக்கும் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்றாம் கட்ட ஆய்பில் மூக்குவழி தடுப்பு மருந்து போதிய நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும், மிகவும்பாதுகாப்பாகச்  செயல்படுவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

சாப்பாடு நல்லா இருக்கா? மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி

Follow Us:
Download App:
  • android
  • ios