ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… கோவையை சேர்ந்த நபர் கைது!!

ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

men who made bomb threat to erode railway station and bus stand arrested

ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த நபர் ஒருவர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து 34 வயதான அந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டவுடன், அந்த நபர் போலீஸாரிடம், தனக்கு வேலை ஏதும் இல்லாததால் உணவு கிடைக்காமல் வாழ்வதற்கு சிரமப்படுவதாகவும், நான் வெடிகொண்டு மிரட்டல் விடுத்ததற்கு கைது செய்யப்பட்டால் சிறையில் உணவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க: மாணவி அனிதா கலையரங்கத்துடன் புதிய மருத்துவமனை; அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

இதுக்குறித்து காவல்துறையினர் கூறுகையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் ஈரோடு ரயில் நிலையம் மற்றும் பிரதான பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து முக்கிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் நகரத்தில் உள்ள வணிகச் சந்தைகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஈரோடு காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் ஈரோடு ரயில் நிலையம், மாநகராட்சி பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கோவையில் நடந்த மத்திய அரசு தேர்வில் ஆள் மாறாட்டம்; கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்

ஆனால் வெடி குண்டு எதுவும் இல்லாததால் காவல்நிலையத்திற்கு வந்த அழைப்பு புரளி என்பது தெரியவந்தது. இதை அடுத்து மிரட்டல் விடுத்த அந்த நபரை சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்தோம் என்றனர். கைது செய்யப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) மற்றும் 507 (தொலைதொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios