மாணவி அனிதா கலையரங்கத்துடன் புதிய மருத்துவமனை; அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் புதிய மருத்துவமனையில் 700 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

minister udhayanidhi stalin inaugurates new hospital in ariyalur district

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ரூபாய் 347 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 26 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2022 ஜனவரி மாதம் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மருத்துவக் கல்லூரியில் வருடத்திற்கு 150 மருத்துவ மாணவர்களின் சேர்க்கையுடன் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து தளங்களைக் கொண்ட 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையின் பல்வேறு மருத்துவ சேவைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து பல்வேறு துறைகளின் சார்பில் 2,539 பயனாளிகளுக்கு ரூ.13.68 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தஞ்சையில் கோர விபத்து; பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி உள்பட 2 பேர் பலி

இதனை தொடர்ந்து அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்டிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளியில் அதிரடி காட்டிய அமைச்சர் தங்கராஜ்; விழி பிதுங்கி நின்ற ஆசிரியர்கள், அதிகாரிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios