கோவையில் 100 ரூபாய்க்காக பலூன் விற்கும் பெண்ணின் கழுத்தை அறுத்த நபரால் பரபரப்பு
கோவையில் பலூன் விற்கும் பெண்ணிடம் ரூ.100 திருடுவதற்காக பெண்ணின் கழுத்தில் பாட்டிலால் தாக்கிய நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் பலூன் விற்று வருகிறார். கோவையில் இவர்களுக்கு வீடு இல்லாத நிலையில் சாலை ஓரங்கள் மற்றும் கடை வாசல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வடகோவை மேம்பாலம் அருகே உள்ள தனியார் ப்ளைவுட் கடை வாசலில் படுத்து உறங்கி உள்ளனர். \
இந்நிலையில் அதிகாலை 5 மணி அளவில் கையில் மது பாட்டிலுடன் வந்த நபர் ரேகா உறங்கி கொண்டிருந்த போது, ரேகாவின் மேல் சட்டையில் இருந்த 120 ரூபாயை திருடிச் செல்ல முயன்று உள்ளார். அப்போது திடீரென ரேகா விழித்துக் கொண்ட நிலையில், தனது கையில் இருந்த மது பாட்டிலால் ரேகாவின் கழுத்தில் தாக்கியதில் ரேகா கூச்சலிட, உடன் படுத்து இருந்தவர் விழித்துக் கொண்டனர்.
Crime News: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
இதனை அடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றவரை பிடித்து கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பதும், உணவகத்தில் வேலை பார்த்து வரும் ஜெகன்நாதன் மீது மேட்டுப்பாளையம், காட்டூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், ஜெகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் காயமடைந்த ரேகா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஊழல் கறை படிந்த காங்., திமுகவின் நடசத்திர பேச்சாளர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன் காட்டம்
இதனிடையே கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், ஜெகநாதன் கடை வாசலில் படுத்து இருந்த ரேகாவிடம் பணத்தைத் திருட முயல்வதும், ரேகா விழித்தவுடன், கழுத்தில் பாட்டிலால் தாக்கி விட்டு தப்பி ஓடும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. மேலும் காயம் அடைந்த பெண்மணி உடன் படுத்து இருந்த சிறுமி எழுந்து ஆறுதல் கூறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.