Asianet News TamilAsianet News Tamil

ஊழல் கறை படிந்த காங்., திமுகவின் நடசத்திர பேச்சாளர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன் காட்டம்

ஊழல் கறை படிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டி உள்ளார்.

kamal haasan is the star speaker of dmk and congress says mla vanathi srinivasan
Author
First Published Apr 29, 2023, 11:06 AM IST | Last Updated Apr 29, 2023, 11:06 AM IST

கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அத்தொகுதியின் உறுப்பினர் வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர், மோர் பந்தலை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கின்ற நிலை மாறி கீழே சென்று கொண்டிருக்கிறது.

மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தான் கவலைப்படுகிறார்கள். கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினை சரியாகும் என்றார்கள். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்த போதும் மக்களுக்காக பணி செய்தேன். ஊழல் கரை படிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன். 

பொன்னியின் செல்வன் படம் பார்த்துக்கொண்டிருந்த பெண் படத்தின் நடுவே திடீரென தற்கொலை

பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. அங்கு கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மை உடன் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி; கணவன், மனைவி கைது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios