Asianet News TamilAsianet News Tamil

முகவரி கேட்பது போல் தாலியை பறித்துச் சென்ற நபர்: தலையில் தட்டி காவலர்களிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

கோவையில் முகவரி கேட்பது போன்று பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

man arrested who try to theft a jewellery in coimbatore
Author
First Published Mar 22, 2023, 4:40 PM IST

கோவை வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பூ. இவர் நேற்று இரவு அவரது கணவர் ஆனந்தவேலுடன் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர். அதே சமயம் இவர்களை பைக்கில் இருவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். கணவன், மனைவி அவர்களது இல்லத்தை அடைந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் பின் தொர்டந்து வந்த இருவரில் ஒருவர் பைக்கில் அமர்ந்தபடி குஷ்பூ விடம் ஒரு விலாசம் கேட்டுள்ளார். 

குஷ்பூ அதற்கு பதிலளிக்க துவங்கிய நிலையில் அவரது கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். உடனடியாக ஆனந்தவேல் சத்தமிட்டதைத் தொடர்ந்து அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவர் மட்டும் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கையில் நகைகள் இருந்ததால் அனைத்து நகைகளும் கைப்பற்றப்பட்டது.

23 ஆண்டு கால ஆசிரியர் பணி: வகுப்பறையில் மாணவர்கள் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்

பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் சித்தாபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(வயது 28) என்பதும் கூலித்தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வாகனத்தில் தப்பிச் சென்ற பீளமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை; உணவுக்கு சாணத்தை கொடுத்து கொடூரம் - பெண் கதறல்

Follow Us:
Download App:
  • android
  • ios